/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாம்பழம் விற்பனை தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாம்பழம் விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாம்பழம் விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாம்பழம் விற்பனை தீவிரம்
ADDED : மே 10, 2024 07:26 AM
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், கட்டளை, திருக்காம்புலியூர், சேங்கல், காட்டூர், மகாதானபுரம், சிந்தலவாடி, லாலாப்பேட்டை, கருப்பத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக மா மரம் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது மரங்களில் மாம்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. பழுத்த மாம்பழங்களை, மொத்தமாக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.மாம்பழங்களை வியாபாரிகள் சில்லரையாக சிந்தலவாடி, கிருஷ்ணராயபுரம், மாயனுார், லாலாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் விற்கின்றனர். மாம்பழம் கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. செந்துாரம், பங்கனப்பள்ளி, அல்போன்ஸா, நீலம் ஆகிய ரக மாம்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.