/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு

ADDED : செப் 26, 2024 03:19 AM
கிராமசபையில் கேள்வி கேட்டவருக்கு மிரட்டல்: வார்டு உறுப்பினர் மீது வழக்கு
கரூர், செப். 26-தென்னிலை அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய முதியவரை, மிரட்டியதாக கிராம பஞ்., வார்டு உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.கரூர் மாவட்டம், கோடந்துார் தெற்கு கிராம பஞ்., பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 52; இவர் கடந்த ஆக., 15 ல் வெட்டு காட்டு வலசு பகுதியில் நடந்த, கோடந்துார் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, பஞ்சாயத்து நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.அப்போது, கோடந்துார் கிராம பஞ்., இரண் டாவது வார்டு உறுப்பினர் நிர்மலா, 48, எழுந்து, துரைசாமியை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, துரைசாமி கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார், வார்டு உறுப்பினர் நிர்மலா மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.