/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த 3 குடும்பத்தினரிடம் விசாரணை
/
த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த 3 குடும்பத்தினரிடம் விசாரணை
த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த 3 குடும்பத்தினரிடம் விசாரணை
த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த 3 குடும்பத்தினரிடம் விசாரணை
ADDED : டிச 01, 2025 02:32 AM
கரூர்: த.வெ.க., பிரசார கூட்டத்தில் உயிரிழந்த, மூன்று பேரின் குடும்-பத்தினரிடம், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல் நடந்த, த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்-தனர். இது தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. அதில், நேற்று காலை, த.வெ.க., பிரசார கூட்டத்தில் உயிரிழந்த கிஷோர் என்பவரின் உறவினர் கோபி, ஹேமலதாவின் கணவர் ஆனந்த ஜோதி, ரவி
கிருஷ்ணனின் தாய் ஞானம்மாள் ஆகிய, மூன்று பேரின் குடும்பத்-தினர் ஆஜராகினர். அவர்களிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசா-ரணை நடத்தினர். விசாரணை முடிந்து, மதியம், 1:00 மணிக்கு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.