/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு
/
அன்னாபிேஷகம் அபிேஷக பொருட்கள் வழங்க அழைப்பு
ADDED : அக் 26, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடக்கவுள்ள, அன்னாபிேஷகத்துக்கு அபிேஷக பொருட்களை பக்தர்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரிய மாலீஸ்வரர் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு வரும் நவ., 5 மாலை, 5:00 மணிக்கு அன்னாபிேஷகம் நடக்கிறது. இதற்கு தேவையான அரிசி, பருப்பு, தானிய வகைகளையும், காய்கறிகளையும், பக்தர்கள் நேரடியாக செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

