/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன கால்வாயில் துாய்மைப்பணி தீவிரம்
/
பாசன கால்வாயில் துாய்மைப்பணி தீவிரம்
ADDED : செப் 24, 2025 01:33 AM
கிருஷ்ணராயபுரம் :பஞ்சப்பட்டி மழைநீர் சேமிப்பு குளத்தில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளில், துாய்மைப்பணி துரிதமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி கிராமத்தில், மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. இந்த குளம், 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் வரும் மழைநீர் குளத்தில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கும் நீரால் பஞ்சப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நீர்மட்டம் கிடைத்து, விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் என்பதால், வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி குளத்திற்கு மழைநீர் வரும்பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. பஞ்., நிர்வாகம் சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, பாசன கால்வாய் பகுதிகளில்
துாய்மைப்பணி நடந்தது.