/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முருங்கையில் கவாத்து செய்வது அவசியம்
/
முருங்கையில் கவாத்து செய்வது அவசியம்
ADDED : டிச 26, 2024 03:05 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, வட்டார வேளாண் அலுவலர் கண்ணன் வெளி-யிட்ட அறிக்கை: கவாத்து என்பது, பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும். கவாத்து செய்வதால், புதிய கிளைகள், பூ மொட்டுகளை துளிர்க்க செய்ய முடியும்.
இதனால் அதிகளவில் புதிய காய்கள், பூக்களை வளர்க்க முடியும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்தால் முருங்கை பயிருக்கு நல்லது. ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்வது அவசியம். குறைந்த-பட்சம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது கவாத்து செய்ய வேண்டும். இதனால் காய்ப்பு தன்மை அதிகரிப்பதுடன் காய்-களின் தரமும் குறையாமல் இருக்கும். மரங்களின் பராமரிப்-பையும், காய்கள் பறிப்பையும் எளிதாக்கும். கவாத்து செய்யும் போது, மரத்தின் நான்கு புற கிளைகளையும் வெட்டி விட வேண்டும். துார் பகுதியில் வெட்டும் போது, துார் பகுதி இரண்-டாக பிளவு பட்டுவிடாமல் வெட்ட வேண்டும். அவ்வாறு பிளவு பட்டால் பிளவு பகுதியில் பூச்சி தாக்குதல் ஏற்படும். அதில் அதிக கவனம் தேவை. முதலில் தேவையில்லாத கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும். மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்-பட்டிருக்கும்போதும், பாசன நீர் பற்றாக்குறையின்போதும் கவாத்து செய்யக்கூடாது. மேலும் பூ வைத்த பிறகும் கவாத்து செய்யக்கூடாது. விவசாயிகள் இயற்கை முறையில், முருங்கை சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

