/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
/
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2025 07:16 AM
கரூர்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அமுதன், வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்படும் என சட்டசபை தேர்தலில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல், இழைக்கப்பட்ட அநீதி களையப்பட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கரூர் தலைமை தபால் நிலையம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், குளித்தலை தாலுகா அலுவலகம், கடவூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.