/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
/
கரூரில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில், மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், புதிய பென்ஷன் நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், 8 வது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.