ADDED : ஜன 15, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த,
ஆர்.டி.மலையில் நாளை ( 16) ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வருவாய் துறை சார்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் கடைப்பிடித்தல் குறித்த ஆலோசனை கூட்டம், குளித்தலையில் சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமையில்
நடந்தது.சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார்கள் குளித்தலை இந்துமதி, கடவூர் இளம் பரிதி ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.இதில், குளித்தலை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் கால்நடை துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற ஆலோசனை வழங்கப்பட்டது.
தலைமை இடத்து துணை தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ..க்கள் கலந்து கொண்டனர்.