/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜீப் டிரைவர்கள் பணியிடம் சான்றிதழ் சரி பார்ப்பு பணி
/
ஜீப் டிரைவர்கள் பணியிடம் சான்றிதழ் சரி பார்ப்பு பணி
ஜீப் டிரைவர்கள் பணியிடம் சான்றிதழ் சரி பார்ப்பு பணி
ஜீப் டிரைவர்கள் பணியிடம் சான்றிதழ் சரி பார்ப்பு பணி
ADDED : அக் 24, 2025 01:11 AM
குளித்தலை, குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில், இரண்டு ஜீப் டிரைவர்கள் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.
இரண்டு பேர் பணியிடத்துக்கு, 219 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். நேற்று முன்தினம், 108 பேருக்கும், நேற்று, 111 பேருக்கும் சான்றிதழ்களை ஒன்றிய ஆணையர் விஜயகுமார் தலைமையில், அலுவலர்கள் சரி பார்த்தனர். பின்னர், வட்டார பகுதி ஆய்வாளர் மீனாட்சி முன், அனுபவம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
நியமன தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார். மேலும் அலுவலக உதவியாளர் பணிக்கு, 69 பேர் விண்ணப்பம் அளித்தனர். கடந்த, 18ல், அலுவலக உதவியாளர் பணியிடத்துக்காக வந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன