/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண்மை இணை இயக்குனர் குளித்தலை வட்டாரத்தில் ஆய்வு
/
வேளாண்மை இணை இயக்குனர் குளித்தலை வட்டாரத்தில் ஆய்வு
வேளாண்மை இணை இயக்குனர் குளித்தலை வட்டாரத்தில் ஆய்வு
வேளாண்மை இணை இயக்குனர் குளித்தலை வட்டாரத்தில் ஆய்வு
ADDED : அக் 01, 2025 02:08 AM
குளித்தலை:குளித்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தை, கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.
பின்னர், பயிர் சாகுபடி பரப்பு, பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம் மற்றும் இதர வேளாண் திட்ட பணிகளை மேற்கொண்டு, சாதனைகள் அடைய அறிவுரை வழங்கினார். வேளாண்மை பணிகளை ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடி, விதை கிராம திட்டத்திலிருந்து விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்திலிருந்து பழ வகை மரச்செடிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட நோட்டீஸ்களை விவசாயிகளுக்கு வழங்கி, பயனடைய கேட்டுக் கொண்டார்.
குளித்தலை வேளா ண்மை உதவி இயக்குனர் குமரன், வேளாண்மை அலுவலர் மகேந்திரன், நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.