ADDED : நவ 24, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் சேவா பாரதி அமைப்பு சார்பில், கோயம்பள்ளி ராமானுஜர் மடத்தில், நேற்று பஜனை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
அதில், ராமானுஜர் திருவுருவ படத்துக்கு சிறப்பு பூஜை, பிரபந்த பாராயணம், பஜனை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட சேவா பாரதி தலைவர் மோகனசுந்தரம், துணைத்தலைவர் சீனிவாசன், ராமானுஜர் மடம் அறங்காவலர் பாலகிருஷ்ணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
