ADDED : நவ 24, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
கரூர்: அரக்குக்குறிச்சி அருகே, மலைக்கோவிலுாரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நாளை நடக்கிறது என, கலெக்டர்
பிரசன்னா ராமசாமி தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலுார் துர்க்கை அம்மன்
மண்டபத்தில், நாளை (25ம் தேதி) காலை 11:00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடக்கிறது. முகாமில்
பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, துறை சார்பில் நலத்திட்ட
உதவிகள் பற்றி விளக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசு துறைகள் சார்பாக
கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
