ADDED : மே 08, 2024 05:17 AM
கரூர் : கரூர் பகுதியில் பனங்கிழங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மருத்துவ குணம் வாய்ந்த பனங்கிழங்கு விற்பனை அதிகளவில் நடக்கிறது.
கரூர் வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சர்ச் கார்னர், மார்க்கெட், லைட்ஹவுஸ் கார்னர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், கோவை ரோடு போன்ற பகுதிகளில் அந்தந்த சீசன்களில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும், கிழங்கு வகைகளும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு, திருச்செந்துார் பகுதிகளில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கு வகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில மாதங்கள் மட்டுமே, விற்பனை செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கட்டு, 50 ரூபாய் என்ற அடிப்படையில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

