/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி
/
க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி
க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி
க.பரமத்தி - வைரமடை பாலம் தரைத்தளம் சேதம்: மக்கள் அவதி
ADDED : நவ 18, 2024 03:42 AM
கரூர்: க.பரமத்தி அருகே, கசிவுநீர் வாய்க்கால் பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்-படுகின்றனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி, தொப்பம்பட்டி - வைரமடை சாலையில், கசிவுநீர் வாய்க்கால் மேல் பகுதியில் கடந்த, 2020ல் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் வழியாக நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்க-ளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில், உயர்மட்ட பாலத்தில் பல இடங்களில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, பாலத்தில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், க.பரமத்தி - வைரமடை சாலையில் இருந்து, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
எனவே, க.பரமத்தி - வைரமடை சாலையில் உள்ள, தொப்பம்-பட்டி உயர்மட்ட பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.