க.பரமத்தி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி
க.பரமத்தி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : செப் 12, 2026 07:44 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:க.பரமத்தி அருகே, மொபட்டில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்தார்.
கரூர்
மாவட்டம், க.பரமத்தி ஆரியூர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்,
45; இவர் கடந்த, 8ம் தேதி இரவு நண்பர் ராமசாமி, 49, என்பவருடன்
டி.வி.எஸ்., மொபட்டில் க.பரமத்தி - ஆரியூர் சாலையில் சென்று
கொண்டிருந்தார்.
இருவரும் ெஹல்மெட் அணியவில்லை. மொபட்டை கிருஷ்ணன்
ஓட்டினார். அப்போது, மொபட் திடீரென நிலை தடுமாறியது. அதில், கீழே
விழுந்த கிருஷ்ணனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு,
திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். ராமசாமிக்கு காயம் ஏற்பட்டது.இதுகுறித்து கிருஷ்ணனின் மகன் கிேஷார், 20, அளித்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
