/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்
ADDED : மே 02, 2024 07:24 AM
கரூர் : கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
நவக்கிரகங்களில் ஒன்றான குரு, ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். அதன்படி நேற்று குரு பகவான், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்தார்.
இதையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவக்கிரக சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு லட்சார்ச்சனை நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரகங்களுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
நடந்தது.
குரு பகவான் உள்ளிட்ட நவக்கிரகங்களுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள், குரு பகவானுக்கு பிடித்தமான சுண்டல் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், வெள்ளி கவசத்தில் குரு பகவான் காட்சியளித்தார். சுவாமிக்கு துாப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை பழைய கரூர் திருச்சி சாலை செம்பொற்ஜோதிஸ்வரர் சிவன் மற்றும் தர்மசம் வர்த்தனி அம்மன் கோவிலில், நேற்று மாலை குருபெயர்ச்சி விழா நடந்தது, தட்சிணமூர்த்தி குருபகவானுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்து வழிபாடு பூஜை செய்யப்பட்டது. மேலும் குருபகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதனால் பரிகார ராசிகளுக்கும், நன்மை பெறும் ராசிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

