/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:48 AM
கரூர்: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின், 122வது பிறந்த நாள் விழா, கரூரில் நேற்று நடந்தது.கரூர் மனோகரா கார்னரில் உள்ள காமராஜர் சிலைக்கு, கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன் தலை-மையில், அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.
* கரூர் மாவட்ட, நாடார் ஐக்கிய சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையிலும், சுதந்திர போராட்ட வீரர்கள்-தியாகிகள் சங்கம் சார்பிலும், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. * கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், மாவட்ட தலைவர் சின்-னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பாங்க் சுப்பிரமணியம் உள்-ளிட்ட நிர்வாகிகள், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.