/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராஜபுரம் ஞான தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி கல்யாண வைபவம் தொடக்கம்
/
ராஜபுரம் ஞான தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி கல்யாண வைபவம் தொடக்கம்
ராஜபுரம் ஞான தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி கல்யாண வைபவம் தொடக்கம்
ராஜபுரம் ஞான தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி கல்யாண வைபவம் தொடக்கம்
ADDED : நவ 03, 2024 02:18 AM
கரூர்: கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவ விழாவையொட்டி, ராஜ-புரம் பிரிவு அருகே உள்ள ஸ்ரீபழனி ஞானதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விரதம் தொடங்கும் பக்தர்கள் கங்-கணம் (காப்பு) கட்டி கொண்டனர்.
கரூர் பகுதியில் இருந்து, சின்னதாராபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராஜபுரம் பிரிவு பகுதியில், ஸ்ரீ பழனி ஞான-தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்-ணமி, கிருத்திகை, சஷ்டி உள்பட முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வருகிறது. நேற்று கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவ விழாவையொட்டி, சுவா-மிக்கு காலையில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.கோவிலில், பக்தர்களுக்கு கந்த சஷ்டி விரதம் தொடங்க கங்-கணம் (காப்பு) கட்டப்பட்டு கந்த சஷ்டி விழா தொடங்கப்பட்-டது. பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பாலமலை பாலசுப்பிரமணி, முன்னுார் காவடி காத்த முருகன், உத்தண்ட வேலாயுத சுவாமி, புன்னத்தில் உள்ள சண்மு-கநாதர் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.