/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்
/
கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்
ADDED : டிச 27, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின் திருவெம்பாவை உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு, ஜன.,1ம் தேதி வரை நடக்கவுள்ளது.
ஜன., 2-ம் தேதி பிச்சாண்டவர் வீதியுலா, ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி மூலவருக்கு நெய் அபிஷேகம், சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு ஆருத்ர அபிஷேகம் செய்து வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நடக்கிறது. சோமாஸ்கந்தர் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

