/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
13ல் கார்த்திகை தீபம்; மண் விளக்கு உற்பத்தி தீவிரம்
/
13ல் கார்த்திகை தீபம்; மண் விளக்கு உற்பத்தி தீவிரம்
13ல் கார்த்திகை தீபம்; மண் விளக்கு உற்பத்தி தீவிரம்
13ல் கார்த்திகை தீபம்; மண் விளக்கு உற்பத்தி தீவிரம்
ADDED : டிச 09, 2024 06:55 AM
கரூர்: கார்த்திகை தீபத்தையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் களிமண் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபம் வரும், 13ல் நடக்கிறது. இதற்கு, களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, ஒரு மாதத்துக்கு முன்பாக களிமண் விளக்குகளை தயார் செய்யும் பணியை மண்பாண்ட தொழிலாளர்கள் தொடங்குவது வழக்கம்.கரூரில், அண்ணா வளைவு, காளிப்பாளையம், தான்தோன்றிமலை, லாலாப்பேட்டை கொடிங்கால் தெரு மற்றும் மாயனுாரில் அதிகளவில் மண் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
குறிப்பாக, கோவில்களில் நாள்தோறும் பயன்படுத்தப்படும், ஐந்து முகம், ஒரு முகம் கொண்ட மண் விளக்குகள் மற்றும் சிறிய அளவிலான விளக்குகள் மின் மோட்டார் மூலம், அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும், ஐந்து நாட்களே உள்ள நிலையில், களிமண் விளக்குகளை உற்பத்தி செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், உழவர் சந்தை, ஜவஹர் பஜார், கோவை சாலை, வெங்கமேடு, தான்தோன்றிமலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 100 சிறிய விளக்குகள், 80 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள், 120 ரூபாய்க்கும், ஐந்து முகம் கொண்ட விளக்கு ஒன்று, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.