/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் சாலை திட்டம்
/
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் சாலை திட்டம்
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் சாலை திட்டம்
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் சாலை திட்டம்
UPDATED : அக் 27, 2024 02:27 AM
ADDED : அக் 27, 2024 01:14 AM
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள
சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் சாலை திட்டம்
கரூர், அக். 27-
கரூர் அருகே மதுரை பைபாஸ் சாலை மற்றும் திருச்சி பைபாஸ் சாலை இணையும், சுக்காலியூரில் இருந்து, கோவை சாலை தண்ணீர் பந்தல் வரை, புதிய சாலை அமைக்கும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மைய பகுதியான கரூரில், ஜவுளி தொழில், கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில், கல் குவாரி, மணல் குவாரி தொழில்களால், வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து, வாரணாசியை இணைக்கும் சாலை, நாகப்பட்டினத்தில் இருந்து, திருச்சி வழியாக கோவையை இணைக்கும் சாலை, கரூர் வழியாக செல்கிறது.
இந்த சாலைகள், ஏதாவது ஒரு பகுதியில் கடந்து செல்லாமல், கரூர் அருகே சுக்காலியூரில் சந்தித்து, நகரப்பகுதியான திருகாம் புலியூர் சென்று, அதன்பிறகு, கோவை மற்றும் ஈரோடுக்கு பிரிந்து செல்லும் வகையில் உள்ளது.
இதனால், சுக்காலியூரில் இருந்து திருகாம் புலியூர் வரை, பைபாஸ் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் துாரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கரூர் நகரப் பகுதியிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, சுக்காலியூரில் இருந்து கருப் பம்பாளையம், அப்பிபாளையம், விஸ்வநா தபுரி வழியாக தாராபுரம் செல்லும் சாலை, தண்ணீர்பந்தல் வரை புதிய பைபாஸ் சாலை அமைக்க கடந்த, 2013ல் திட்டமிடப்பட்டது. இதற்காக, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்துகளிலும் ஒப்புதலும் பெறப்பட்டது.
புதிதாக சாலை அமைக்கப்படும் பட்சத்தில் திருச்சி, மதுரையில் இருந்து கோவை செல் லும் வாகனங்கள், கரூர் நகரம் திருகாம்புலியூர் செல்வதை தவிர்க்க முடியும். மேலும், 11 கிலோ மீட்டர் துாரம், பயண நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும். மேலும், விஸ்வநாதபுரி-அப்பிபாளையம் இடையே அமராவதி ஆற்றில் பாலம் கட்டப் படுவதால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாலை செல்லும் கிராமப் பகுதி களில் பொருளாதாரம் வளர்ச்சி மேம்படும். கரூர் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஆனால், இந்த திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு ள்ளது. இதை நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.