/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கரூர் பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : டிச 24, 2024 02:17 AM
கரூர், டிச. 24-
கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட கடைகள், மாநகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண் டில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைக்காரர்களும், நடைமேடையை ஆக்கிரமித்து, வியாபார பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர். இதனால், பயணிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடைகளின் முன்பு றம் பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை ஆபத்தான வகையில் காஸ் வைத்து தயாரிக்கின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளதால் பயணிகள், வயதானவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மாநகராட்சி கமிஷனர் சுதா தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அங்குள்ள நடைபாதையில் ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த பொருட்களை அகற்றினர். மேலும், மேற்கூரைகளை அகற்றி சென்றனர். மேலும் பஸ் ஸ்டாண்ட் சுற்று பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.