/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறைந்த வாடகையில் 'ட்ரோன்' கரூர் கலெக்டர் தகவல்
/
குறைந்த வாடகையில் 'ட்ரோன்' கரூர் கலெக்டர் தகவல்
ADDED : நவ 28, 2024 01:04 AM
கரூர், நவ. 28-
வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்காக, இரு ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி பஞ்.,ல் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் குறைந்த வாடகையிலும், வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்கான, இரு ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய மகசூலை
அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை சார்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், 742 வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வரப்பட்டுள்ளது. தற்போது அந்த பணிகள் நடக்கிறது. இவை தவிர, வீடுகள் பராமரிப்பு செய்வதற்கும் நிதி உதவி பெறப்
பட்டுள்ளது.
கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் தங்கள் அருகில் உள்ள வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.குறிப்பாக, 4.50 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவதற்கு எவ்வித ஆவணமும் இன்றி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி குழு தோகைமலை வட்டாரத்தை பின் தங்கிய வட்டாரமாக அறிவித்து, 1.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி தேவையான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு பேசினார்.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், சப்-கலெக்டர் பிரகாசம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், இணை இயக்குனர் (வேளாண்) சிவானந்தம், தாட்கோ மாவட்டமேலாளர் முருகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.