/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல கரூர் கலெக்டர் அறிவுறுத்தல்
/
போலீஸ் அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல கரூர் கலெக்டர் அறிவுறுத்தல்
போலீஸ் அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல கரூர் கலெக்டர் அறிவுறுத்தல்
போலீஸ் அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல கரூர் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 15, 2025 02:32 AM
கரூர், விநாயகர் சிலை ஊர்வலம், போலீஸ் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை வைத்தல், விசர்ஜனம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:வரும், 27ல் கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி திரு
விழாவில், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகள் நிறுவுவதற்கு, சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.,விடம் உரிய அனுமதி பெற்று நிறுவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகள் நீர்நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வண்ணங்களை மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம், 10 அடிக்கும் மேலாக இருக்கக் கூடாது.
விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில், எளிதில் தீப்பற்றக்
கூடியப் பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும், 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில், 2 பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும்.
ஒலிப்பெருக்கிகள் காலை, 2 மணி நேரம் மற்றும் மாலை, 2 மணி நேரம் என பூஜை நடைபெறும் நேரங்களில் மட்டுமே, பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், போலீஸ் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா, டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ., முகமதுபைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.