/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பை மேடாக மாறி வரும் கரூர் கலெக்டர் அலுவலகம்
/
குப்பை மேடாக மாறி வரும் கரூர் கலெக்டர் அலுவலகம்
ADDED : அக் 11, 2025 12:43 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயத்தில், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளனர்.
கரூர்-வெள்ளியணை சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. அதில், பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதில், நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதை தவிர, வேலை நாட்களில் பொதுமக்களும் பல்வேறு பணிகளுக்காக, கலெக்டர் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பைகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிதறுகின்றன. இதனால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், தேங்கியுள்ள குப்பையில் ஏற்பட்டுள்ள கொசு உற்பத்தியால் தொற்று அபாயம் உள்ளது.
எனவே, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.