/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலைமறைவு குற்றவாளிக்கு பிடிவாரன்ட் கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஆக 05, 2025 01:00 AM
கரூர், தென்னிலை அருகே, கடத்தல் வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து, கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 59; இவர், கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கடந்த, 2011 ஜூன், 11ல் நடந்த, கடத்தல் மற்றும் அடிதடி வழக்கில் கைதாகி, ஜாமினில் சிறையில் இருந்து வெளியே சென்றார்.
பிறகு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், முருகேசன் தலைமறைவாகி விட்டார். கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, தென்னிலை போலீசார், கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து, பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள குற்றவாளி முருகேசனுக்கு, கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரகாஷ் பிடிவாரன்ட் பிறப்பித்து வரும், 18 ல் காலை, 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டார்.