/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
இன்று கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : நவ 09, 2024 01:33 AM
கரூர், நவ. 9-
கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று (9ல்) மாலை நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கை:
கரூர் மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அதில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா, தொகுதி பார்வையாளர் அறிமுகம், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

