/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சூரியகாந்தியை அறுவடை செய்ய ஆள் பற்றாக்குறை : விவசாயிகள் அதிருப்தி
/
சூரியகாந்தியை அறுவடை செய்ய ஆள் பற்றாக்குறை : விவசாயிகள் அதிருப்தி
சூரியகாந்தியை அறுவடை செய்ய ஆள் பற்றாக்குறை : விவசாயிகள் அதிருப்தி
சூரியகாந்தியை அறுவடை செய்ய ஆள் பற்றாக்குறை : விவசாயிகள் அதிருப்தி
ADDED : செப் 01, 2011 05:25 AM
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் சூரியகாந்தி விளைச்சல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடை செய்ய விவசாய கூலியாட்கள் இல்லாமல் விவசாயிகள் காரணமாக திணறி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட மணவாசி மற்றும் வீரராக்கியம், கட்டளை, பஞ்சப்பட்டி, மைலம்பட்டி, வயலூர் ஆகிய பகுதிகளில் பரவலாக எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சூரியகாந்தி நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் அதனை பக்குவமாக அறுவடை செய்ய போதுமான விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தற்போது மழை விட்டு விட்டு பெய்கிறது. இதனால் ஈரப்பதமான சூழ்நிலையில் சூரியகாந்தி அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணிகளில் உள்ளவர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சூரியகாந்தி எண்ணெய் வித்துக்கள் கூடுதலாக விலை உள்ளதால் விவசாயிகள் முடிந்தவரை அறுவடை பணிகளை துவங்கியுள்ளனர். மேலும், 'சூரியகாந்தி விற்பனை செய்ய ஏதுவாக வேளாண்மை துறை சார்பில் சிறப்பு கொள்முதல் நிலையம் அமைக்க முன் வர வேண்டும்' என பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.