/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராமசாமி செட்டியார் பள்ளி தடகள போட்டியில் சாதனை
/
ராமசாமி செட்டியார் பள்ளி தடகள போட்டியில் சாதனை
ADDED : செப் 24, 2011 11:48 PM
கரூர்: புலியூர் கவுண்டம்பாளையம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான குறுவட்ட தடகள போட்டி நடந்தது.
போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சபரிநாதன் உயரம் தாண்டுதலில் முதலிடமும், பிரபு 200 மீ., ஓட்டம், 600 மீ., ஓட்டத்தில் முறையே இரண்டாமிடமும், சந்தோஷ் தட்டு எறிதலில் முதலிடமும், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும், நீளம் தாண்டுதலில் கவின் இரண்டாமிடமும், 400 மீ., ஓட்டத்தில் சதீஷ் மூன்றாமிடமும், 100 மீ., ஓட்டத்தில் சரவணன் மூன்றாமிடம் பெற்றனர். பதினேழு வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பிரகாஷ்ராஜ் 100 மீ., ஓட்டத்தில் முதலிடமும், 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதலில் முறையே இரண்டாமிடமும், கவின் 200 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடமும், உயரம் தாண்டுதலில் முதலிடமும், கவுதம் தத்தித் தாண்டுதல், ஈட்டி எறிதல் முறையே முதலிடமும், குமரேசன் தட்டு எறிதலில் இரண்டாமிடமும், குண்டு எறிதலில் மூன்றாமிடமும், கார்த்திக் 100 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடமும், தங்கராஜ் 200 மீ., ஓட்டம், 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் முறையே முதலிடம் பெற்று 15 வெற்றிப்புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். வெற்றிப்பெற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் வீரதிருப்பதி, செட்டிநாடு சிமென்ட் ஆலை தொழில்நுட்ப இயக்குனர் சுதாகர், இணை தலைவர் சுப்பிரமணியன், தலைமையாசிரியர் மோகனசுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.

