/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் செப்.,29 ல் மாரத்தான் ஓட்டம்
/
கரூரில் செப்.,29 ல் மாரத்தான் ஓட்டம்
ADDED : செப் 19, 2024 07:27 AM
கரூர்: கரூரில், மாரத்தான் ஓட்டம் வரும், 29ல் நடக்கிறது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, தமிழ்நாடு விளை-யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை
பிறந்த நாளை முன்னிட்டு வரும், 29 காலை 6:00 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. 17 முதல், 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு,
8 கி.மீ. துாரம் திண்டுக்கல் செல்லும் ரோடு வழியாக, ஆஸ்ரமம் மேல்நிலைப்பள்ளி சென்று மீண்டும் திரும்பி கலெக்டர்
அலுவலகம் வந்தடைதல் வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., துாரம் கரூர் திண்டுக்கல் ரோடு வழியாக
வெள்ளியணை சென்று, கலெக்டர் அலுவலகம் வந்தடைய வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, 5 கி.மீ துாரம்
கரூர் திண்டுக்கல் ரோடு வழி-யாக மீண்டும் திரும்பி, கலெக்டர் அலுவலகம் வந்தடைதல் வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது ஆதார், வயது சான்-றிதழ், வங்கிக்கணக்கு நகல்களை சமர்பித்தல் வேண்டும்.
ஆவ-ணங்கள் சமர்பிக்காதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடி-யாது.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசு தொகையாக தலா, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு தலா, 2,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய், 4 முதல், 10ம் இடம்
வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், பரிசுத் தொகை வழங்கப்படும்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.