/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல்
/
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல்
ADDED : மே 28, 2025 01:02 AM
கரூர், கரூர், மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி இன்று (28 ம் தேதி) மாலை 5:15 மணியளவில் நடக்கிறது.
கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடந்தன.
விழாவில், நேற்றுமுன்தினம் அதிகாலை முதலே ஐந்து ரோடு அமராவதி ஆற்றங்கரை, வஞ்சியம்மன் கோவில் தெரு அமராவதி ஆற்றங்கரையிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், காவடி எடுத்து, குழந்தையை தொட்டில் கட்டியும், தீர்த்தக்
குடங்கள் எடுத்து வந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதியம், 1:00 மணி வரை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்களுக்கு நிகராக பெண் பக்தர்களும், விமான அலகுகளை குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, அனைவரையும் பக்தி பரவசப்படுத்தினர். ஆயிரக்கணக்கானோர் தேரை இழுத்து வழிபட்டனர். பக்தர்கள் மாவிளக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகளவில் விமான அலகு உள்ளிட்ட பெரிய அலகுகளை குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் இன்று மாலை 5:15 மணியளவில் நடக்கிறது. கோவிலில் இருந்து கருப்பாயி கோவில் தெரு அமராவதி ஆற்றங்கரை வரை ஊர்வலமாக எடுத்து சென்று அனுப்பப்படுகிறது. மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கிறது.
தொடர்ந்து நாளை முதல் ஜூன், 8 வரை, புஷ்பம், கருடன், மயில், கிளி, வேப்ப மரம், பின்ன மரம், புஷ்பம், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, ஸ்ரீ மாரியம்மன் பல்லக்கு, ஆகிய வாகனங்களில் நாள்தோறும் ஒன்றில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஜூன், 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் சம்ரோஷணை, அம்மன் குடிபுகுதல்
நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.