/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒருங்கிணைந்த கோர்ட் கட்டிட பணி பொதுப்பணி துறை செயலாளர் ஆய்வு
/
ஒருங்கிணைந்த கோர்ட் கட்டிட பணி பொதுப்பணி துறை செயலாளர் ஆய்வு
ஒருங்கிணைந்த கோர்ட் கட்டிட பணி பொதுப்பணி துறை செயலாளர் ஆய்வு
ஒருங்கிணைந்த கோர்ட் கட்டிட பணி பொதுப்பணி துறை செயலாளர் ஆய்வு
ADDED : ஜூலை 29, 2011 11:27 PM
குளித்தலை: குளித்தலையில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோர்ட் கட்டுமான பணியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் நேற்று ஆய்வு செய்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:குளித்தலையில் நான்கு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் குடியிருப்பு கட்டுமானம் வரும் டிசம்பர் மாதத்தில் பணி நிறைவு செய்ய அரசு உத்தரவு செய்தி
ருந்தது.
பணிகள் விரைவாக நடந்து வருவதால் வரும் நவம்பர் மாதத்தில் பணிகள் நிறைவு செய்து நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்படும். பணிகள் விரைந்தும், கட்டுமானப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், காண்ட்ரக்டர்களுக்கு துறை சார்பில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தங்க பிரகாசம், கண்காணிப்பு பொறியாளர் சம்பத், கரூர் மாவட்ட செயற்பொறியாளர் கண்ணம்மாள், குளித்தலை எஸ்.டி.ஓ., தவமணி, உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.