/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்
/
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்
ADDED : ஆக 21, 2011 02:15 AM
கரூர்: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் 'ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அண்ட் எக்ஸ்பார்ட் சிஸ்டம்ஸ்' என்ற தலைப்பில் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
சென்னை 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவன கன்சல்டன்ட் நாகராஜன் கருப்பையா முகாமை துவக்கி வைத்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் 'ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' எப்படி பயன்படுகிறது என்பதைக் குறித்து விளக்கி பேசினார். துணை முதல்வர் சித்ரா, 'ஆர்ட்டிஃபிசியல் நியூரல் நெட்வொர்க்ஸ்' என்ற தலைப்பிலும், பேராசிரியர் பேபி, 'அன் சூப்பர்வைஸ்டு லேர்னிங்' என்ற தலைப்பிலும், சி.டி.ஓ., துக்ரா மகதி டெக்னாலஜிஸ் மதுசூதனன், 'இம்மீயூன் சிஸ்டம்ஸ் என்ற தலைப்பிலும் பேசினர். கல்லூரி முதல்வர் குமாரசாமி, செயலாளர் இன்ஜினியர் ராமகிருஷ்ணன், முதல்வர் வளவன், துணை முதல்வர் சித்ரா, தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் திலகமணி உள்பட பலர் பங்கேற்றனர்.