sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

/

முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?


ADDED : ஆக 21, 2011 02:15 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பஞ்சப்பட்டி ஏரியில் முட்புதர்கள் மண்டியிருப்பதால், மழைநீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பஞ்சப்பட்டி அருகே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பாசன வசதி கொண்ட மிகப்பெரிய ஏரியாக பஞ்சப்பட்டி ஏரி உள்ளது. 100 ஆண்டுகளை தொட்ட பஞ்சப்பட்டி ஏரி, கடவூர் தாலுகா பகுதியில் ஆரம்பித்து அதனை தொடர்ந்து பஞ்சப்பட்டி வரை 1,300 மீ., நிளம் வரை பரப்பளவு கொண்டுள்ளது. கடவூர், பஞ்சப்பட்டி, மைலம்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் நேரடியாக பஞ்சப்பட்டி ஏரியில் தேக்கப்படுகிறது. இதன்மூலம் 42.5 டி.எம்.சி., வரை தண்ணீர் தேக்கப்பட்டு பஞ்சப்பட்டி பிரதான மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் பஞ்சப்பட்டி, வயலூர், கருப்பத்தூர், குளித்தலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட விளை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.



மறைமுகமாக ஊற்று கிணறு பகுதிகளுக்கு, தண்ணீர் ஊற்றாக ஏரி பயன்படுகிறது. ஏரியின் மூலம் மொத்தம் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வருகின்றது. முறையான பராமரிப்பில்லாத காரணத்தினால், தற்போது ஏரியின் உள்பகுதியில் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்துள்ளன. ஏரியில் உள்ள தண்ணீரை முட்புதர்கள் உறிஞ்சுவதால், தேங்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாசன வசதிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீர் அனைத்தையும் ஏரியில் தேங்க முடியாத நிலை உள்ளது. பஞ்சப்பட்டி ஏரி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், பஞ்சப்பட்டி ஏரி முழுவதும் வளர்ந்துள்ள முட்புதர்களை முழுவதுமாக வெட்டி, அகற்ற வேண்டும். ஏரியை தூர்வார வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.








      Dinamalar
      Follow us