/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜெ., பிரசாரத்தின் போது விபத்தில் அடிப்பட்டவருக்கு கி.புரம் எம்.எல்.ஏ., நிதி

ADDED : செப் 03, 2011 12:38 AM
கரூர்: கடந்த சட்டசபை தேர்தலின் போது கரூருக்கு ஜெயலலிதா பிரசாரத்து வந்த போது விபத்தில் காயம் அடைந்த வாலிபருக்கு எம்.எல்.ஏ., காமராஜ் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது பிரச்சார கூட்டத்துக்கு, கிருஷ்ணராயபுரம் தொகுதி பள்ளப்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (35) வந்தார். கூட்டம் முடிந்து டூவிலரில் வீட்டுக்கு சென்ற போது சாலை விபத்தில் சிக்கினார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈஸ்வர மூர்த்திக்கும், அதே போல் சாலை விபத்தில் படுகாயமடைந்த அரவக்குறிச்சி தொகுதி மகவுண்டனூரை சேர்ந்த டி.என்.பி.எல்., ஒப்பந்த தொழிலாளர் முத்துசாமி (36) என்வருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாயை மருத்துவ சிகிச்øகாக எம்.எல்.ஏ., காமராஜ் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் சிவதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.