sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அரசு மருத்துவமனையில் ஐஸ் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

/

கரூர் அரசு மருத்துவமனையில் ஐஸ் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

கரூர் அரசு மருத்துவமனையில் ஐஸ் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

கரூர் அரசு மருத்துவமனையில் ஐஸ் வியாபாரி தீக்குளிக்க முயற்சி


ADDED : செப் 10, 2011 03:53 AM

Google News

ADDED : செப் 10, 2011 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'கரூர் அரசு மருத்துவமனையில் நாய் கடித்து ஊசி போட்டதால் இடது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் சரிவர நடக்க முடியவில்லை' என கூறி ஜஸ் வியாபாரி தீக்குளிக்க முயன்றார்.கரூரை அடுத்த பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சின்னப்பன் (45) ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி சின்னப்பனை நாய் கடித்து விட்டது. இதனால் கரூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 3 ம் தேதி, 6 ம் தேதி மற்றும் 10 ம் தேதிகளில் ஊசி போட்டுள்ளார். 10 ம் தேதிக்கு பிறகு, இடது இடுப்பில் ஊசி போட்டதால் சரிவர நடக்க முடியவில்லை' என மீண்டும் கரூர் அரசு மருத்துவமனையில் சின்னப்பன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று முன்தினம் இடது காலால் நடக்க முடியவில்லை என கரூர் அரசு மருத்துவமனைக்கு சின்னப்பன் சென்றார். அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த சின்னப்பன், 'கரூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரிவர சிகிச்சை அளிக்காமல் மெத்தனமாக உள்ளனர். மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாத நிலை உள்ளது' என கூறி நேற்று மதியம் 12 மணிக்கு கரூர் அரசு மருத்துவமனையில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு பற்ற வைக்க முயன்றார்.அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், சின்னப்பனை பிடித்து காப்பாற்றினர். பின்னர் டாக்டர்கள் விரைந்து வந்து சின்னப்பனை, மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.கரூர் அரசு மருத்துவமனையில் சின்னப்பன் தீக்குளிக்க முயன்றதால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us