sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கரூரில் பிரச்சாரம் துவக்கம்

/

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கரூரில் பிரச்சாரம் துவக்கம்

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கரூரில் பிரச்சாரம் துவக்கம்

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கரூரில் பிரச்சாரம் துவக்கம்


ADDED : அக் 12, 2011 11:41 PM

Google News

ADDED : அக் 12, 2011 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில் பிஸியாக இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று முதல் கரூரில் பிரச்சாரத்தை தொடங்கினர்.கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ், குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம் ஆகியோர், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கான பிரச்சார பணிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த ஒரு வார காலமாக திருச்சியில் முகாமிட்டு, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள், இரண்டாம் கட்ட கட்சி நிர்வாகிகளோடு சென்று பிரச்சாரம் செய்து வந்தனர்.நேற்று முன்தினம் திருச்சி சட்டசபை தொகுதிக்கான பிரச்சாரம் முடிவடைந்தது. இதையடுத்து 'திருச்சியில் முகாமிட்டிருந்த வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும்' என மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் செ ந்தில் பாலாஜி, நேற்று கோடங்கிப்பட்டியில் சமீபத்தில் தி.மு.க., வில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் சேர்ந்த நடிகர் தியாகுவுடன், கரூர் நகராட்சிக்கான வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.புலியூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் மயில்ராஜ், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் பாலுசாமி, ரமேஷ் குமார், பூபதி ஆகியோரை ஆதரித்து, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.






      Dinamalar
      Follow us