/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொது நுாலக துறை சார்பில் கரூருக்கு 3 விருது வழங்கல்
/
பொது நுாலக துறை சார்பில் கரூருக்கு 3 விருது வழங்கல்
பொது நுாலக துறை சார்பில் கரூருக்கு 3 விருது வழங்கல்
பொது நுாலக துறை சார்பில் கரூருக்கு 3 விருது வழங்கல்
ADDED : நவ 24, 2024 01:00 AM
கரூர், நவ. 24-
கரூர் மாவட்டத்துக்கு, பொது நுாலகத் துறை சார்பில், மூன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொது நுாலகத் துறை சார்பில், நுாலகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டில் அதிக புரவலர்களை சேர்த்தமைக்காக, கரூர் மைய நுாலகம், சேங்கல் ஊர்ப்புற நுாலகத்துக்கு சிறந்த நுாலகத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொது நுாலகத் துறையில் சிறப்பாக பணியாற்றிய, சேங்கல் ஊர்ப்புற நுாலகர் லட்சுமிக்கு, டாக்டர் எஸ்.ஆர்., அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது. அதை சென்னையில் நடந்த விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், நுாலகர் லட்சுமிக்கு வழங்கினார்.
விருது பெற்ற நுாலகர் லட்சுமி, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கலெக்டர் தங்கவேல் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், இனாம் கரூர் கிளை நுாலகர் மோகன சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.