sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் சிலவரி செய்திகள்

/

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்


ADDED : பிப் 06, 2025 05:46 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சலவை தொழிலாளர்கள்

சங்க ஆலோசனை கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட, சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன்

தலைமையில், வெண்ணைமலையில்

நடந்தது.

அதில், தமிழ்நாடு கலைஞர் கைவினை திட்டம் மூலமாக, சலவை தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கிய, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, நடப்பாண்டு துணி அயர்ன் செய்ய, 15 ரூபாய், சலவைக்கு, 50 ரூபாய், பட்டுப்புடவை அயர்ன் செய்ய, 100 ரூபாய் உயர்த்தி கூலி நிர்ணயம் செய்வது, வரும் மார்ச் மாதத்தில், மாநில அளவில் நடக்கவுள்ள அமைப்பு தேர்தலில் பங்கேற்பது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட தலைவர் கருணாநிதி, இணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

டூவீலர் மீது டிராக்டர்

மோதி ஒருவர் பலி

கரூர்: கரூரில், டூவீலர் மீது டிராக்டர் நேருக்கு நேர், மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கரூர், மொய்தின் தெருவை சேர்ந்தவர் அலாவுதின், 52; இவர், நேற்று முன்தினம் கவாஸ்ஷகி டூவீலரில், கரூர் சர்ச் கார்னர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரூர் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த அழகர், 28, என்பவர் ஓட்டி சென்ற டிராக்டர், டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. அதில், கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்த அலாவுதின், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கரூர் டவுன்

போலீசார் விசாரிக்கின்றனர்.

பள்ளி சிறுமிக்கு தொல்லை

போக்சோவில் வாலிபர் கைது

கரூர்: கரூர் அருகே, பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், ஏமூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் அரவிந்த், 23; இவர், கரூர் அருகே பசுபதிபாளையத்தில், தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும், 16 வயது சிறுமிக்கு, காதலிக்க சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, பள்ளி சிறுமியின் உறவினர் கொடுத்த புகார்படி, அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ், பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள

செடிகளை அகற்ற வேண்டும்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டி முதல் மேட்டுப்பட்டி வரை தார் சாலை செல்கிறது. சாலையோர பகுதிகளில் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. மேலும், சாலையோரம் உள்ள மின்கம்பங்களின் மேல் பகுதியில் செல்லும் மின்கம்பிகள் மீது முள் செடிகள் படர்ந்துள்ளது.

இதனால் சில நேரங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. மேலும் காற்று வீசும்போது, மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகிறது. இதனால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மின்கம்பிகளில் உரசும் முள் செடிகளை அகற்ற, மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us