ADDED : ஜூலை 30, 2026 02:38 AM
கரூர் கிழக்கு பகுதி அ.தி.மு.க.,
நிர்வாகிகள் ஆலோசனை
கரூர்: கரூர் மாநகர கிழக்கு பகுதி, அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம், பகுதி செயலாளர்
சரவணன் தலைமையில் நடந்தது.
அதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன், வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் உறுதி ஏற்பது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, கரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் முத்து, வார்டு செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சிவனடியார் ஆண்டு விழா
வரும், 1, 2ல் நடக்கிறது
கரூர்: கரூர் சிவனடியார் திருக்கூட்டம், 31வது ஆண்டு விழா மற்றும் 63 நாயன்மார்களின், 30 வது ஆண்டு விழா வரும் ஆக., 1, 2ல்
நடக்கிறது.
அதன்படி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும், 1ம் தேதி மதியம் 12:00 மணி வரை, 63 நாயன்மார்கள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், 63 நாயன்மார்களின் திருவீதி உலா, திருமுறை இன்னிசையுடன் நடக்கிறது.
ஆக.,2ல் காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சிவனடியார் திருக்கூட்டம், 30 வது ஆண்டு விழா, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் புகழ் சோழர் மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
மொபட் மீது கார் மோதி
முதியவர் உயிரிழப்பு
கரூர்: க.பரமத்தி அருகே மொபட் மீது, கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
க.பரமத்தி மலைச்சிபுதுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 82; இவர், நேற்று முன்தினம் காருடையாம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த ராமசாமி, 61, என்பவர் ஓட்டி சென்ற டஸ்ட் கார், மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த பெருமாள் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் மாயம்; தாய் புகார்குளித்தலை: குளித்தலை அடுத்த புத்துார் பஞ்., ஆனைகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சங்கரி, 57. இவரது மகன் சரவணா, 27, விவசாயி. இவர் கடந்த 27ல், மேலபட்டியில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், பின்னர் திரும்பி வரவில்லை. அவரது மொபைல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சங்கரி கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
