/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க கரூர் எஸ்.பி., அலுவலகம் அழைப்பு
/
ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க கரூர் எஸ்.பி., அலுவலகம் அழைப்பு
ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க கரூர் எஸ்.பி., அலுவலகம் அழைப்பு
ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க கரூர் எஸ்.பி., அலுவலகம் அழைப்பு
ADDED : ஆக 06, 2025 01:20 AM
கரூர், கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, மாவட்ட எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் சார்பில், வெளியிடப்பட்டுள்ள செய்திக்
குறிப்பு: கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, ஊர்க்காவல் படை வீரர் பதவிக்கு, தகுதியான நபர்களிடமிருந்து (ஆண்-37, பெண்-5) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி மற்றும் தவறியவர்களாக இருக்கலாம். வயது, 31.7.25 அன்று, 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாதம், ஐந்து நாட்கள் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு, 560 ரூபாய் வீதம், 2,800 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள, ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வரும், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கல்வி சான்று, புகைப்படங்கள் ஆகியவற்றை வரும், 22ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

