/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாணவருக்கு துாய தமிழ் பற்றாளர் விருது
/
கரூர் மாணவருக்கு துாய தமிழ் பற்றாளர் விருது
ADDED : மார் 08, 2024 07:14 AM
அரவக்குறிச்சி : தமிழ்நாடு அரசு -செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம், ஆண்டுதோறும் எழுத்து, பேச்சு மற்றும் நடைமுறை வாழ்க்கையில், துாய தமிழில் பேசுவோரை ஊக்கப்படுத்த துாய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்குகிறது.
இந்த ஆண்டு மொத்தம், 21 நபர்களுக்கு துாய தமிழ்ப்பற்றாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில், நேற்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் விருது வழங்கினார். கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் கரூர் அரசு கல்லுாரி தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆதன் பதிப்பக நிறுவனராக உள்ளார். இவர், அரசின் துாய தமிழ்ப் பற்றாளர் விருதையும், 20 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையையும் பெற்றார்.

