/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வெற்றி விநாயகா மேல்நிலை பள்ளி பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி

ADDED : மே 09, 2025 02:38 AM
கரூர், கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவர் முகமது அன்ஷார், 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி சாகித்யா, 580மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி வைஷ்ணவி, 577 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 144 மாணவர்களும் முழு தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 550 மதிப்பெண்களுக்கு மேல், 14 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 32 மாணவர்கள் பெற்றுள்ளனர். தமிழில், 99 மதிப்பெண்கள், 3 மாணவர்களும், 100க்கும் 100 மதிப்பெண்கள் ஆங்கிலத்தில், ஒருவரும்,கணினி அறிவியலில், 8 பேரும், கணினி பயன்பாட்டில் ஓருவரும், வணிகவியலில் ஒருவரும், பொருளியலில், 2 பேரும் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண், 458 பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் அறக்கட்டளை தலைவர் ஆர்த்தி.சாமிநாதன், பள்ளியின் செயலாளர் அரோமா.சாமிநாதன், பள்ளியின் ஆலோசகர்கள் பழனியப்பன், நல்லசாமி, பள்ளி முதல்வர் சுகுமார் ஆகியோர் பாராட்டினர்.