/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி தோட்டத்தில் கொல்லிமலை பட்டாம் பூச்சிகள்
/
அரவக்குறிச்சி தோட்டத்தில் கொல்லிமலை பட்டாம் பூச்சிகள்
அரவக்குறிச்சி தோட்டத்தில் கொல்லிமலை பட்டாம் பூச்சிகள்
அரவக்குறிச்சி தோட்டத்தில் கொல்லிமலை பட்டாம் பூச்சிகள்
ADDED : ஜூலை 16, 2025 02:11 AM
அரவக்குறிச்சி, கரூர் அருகே இயற்கை விவசாய தோட்டத்தில், ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரே இடத்தில் தங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே லிங்கமநாயக்கன்பட்டி கிராமத்தில், சரோஜா என்பவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதி வறண்ட நிலை தன்மையை கொண்டது. நமக்கு தேவையான பழங்களை, நாமே உற்பத்தி செய்வது என்ற நோக்கத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் நெல்லி, கடுக்கான், விலா, அத்தி, நாவல், இலுப்பை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, முருங்கை உள்ளிட்டவற்றை இவர் சாகுபடி செய்து வருகிறார். தற்போது இவர் விவசாயம் செய்யும் அனைத்து பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக கூட்டம் கூட்டமாக பறந்து வந்து மரங்களில் தங்கி உள்ளன.
இதுகுறித்து இயற்கை விவசாயி சரோஜா கூறியதாவது: ஒரு மாதத்திற்கு மேலாக ப்ளூ டைகர், டார்க் ப்ளூ டைகர், காமன் குரோ உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட வகையான பட்டாம் பூச்சி ரகங்கள் ஆயிரக்கணக்கில் இங்கேயே உள்ளது. இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. கொல்லிமலை, பச்சமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் அதிகளவு பார்க்கக்கூடிய, பட்டாம் பூச்சிகளை இங்கு பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கிராம மக்களும் இங்கு வந்து பட்டாம் பூச்சிகளை பார்த்து செல்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.

