/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறுவட்ட அளவிலான போட்டி கொங்கு மேல்நிலைப்பள்ளி அசத்தல்
/
குறுவட்ட அளவிலான போட்டி கொங்கு மேல்நிலைப்பள்ளி அசத்தல்
குறுவட்ட அளவிலான போட்டி கொங்கு மேல்நிலைப்பள்ளி அசத்தல்
குறுவட்ட அளவிலான போட்டி கொங்கு மேல்நிலைப்பள்ளி அசத்தல்
ADDED : ஆக 15, 2025 03:18 AM
கரூர், கரூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது. இதில், குழு விளையாட்டு போட்டியில், கரூர் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி, 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவு பீச் வாலிபால் போட்டியில் முதலிடம், த்ரோபால் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவு த்ரோ பால் போட்டியில் முதலிடம், பீச் வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம், 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் கோகோ போட்டியில் இரண்டாம் இடம், பீச் வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம், வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.
17 வயதுக்குட்பட்ட தடகள போட்டியில் மாணவி சுபாஸ்ரீ, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். 19 வயதுக்குட்பட்ட தடகள போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கவுசிகா, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
இதே பிரிவில் மாணவி பிரியதர்ஷினி, 100, 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.
கொங்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலுகுரு
சுவாமி, பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.