/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:03 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம், பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். வார்டு எண்-2ல், அரச வள்ளி மாரியம்மன் கோவில் தெரு, தென்கரை வாய்க்காலில் ரூ.10 லட்சம் மதிப்பில் பெண்களுக்காக படித்துறை அமைத்தல், வார்டு எண் 14ல், குச்சிப்பட்டி டிரான்ஸ்பார்மர் அருகில், சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், இரண்டு கட்டங்களாக நடத்துவது, துாய்மை பணியாளர் கொடியரசு ஓய்வு பெற உள்ளதால், அவருக்கு வழங்க வேண்டிய சேமநல நிதி தொகை மற்றும் விடுப்பூதிய பணப்பலன்கள் வழங்கி மன்ற பார்வைக்கு வைத்தல் மற்றும் வரவு, செலவு கணக்கும் குறித்து பேசப்பட்டது.