/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : ஆக 01, 2025 01:22 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் பஞ்சாயத்து வளாகத்தில் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில் மேல அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், வேடர் தெருவில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல், மலையப்பகாலனி பகுதியில் புதிதாக சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய மினிபவர் பம்பு அமைத்தல், பிச்சம்பட்டியில் புதிதாக ஆழ்குழாய் அமைத்து சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல், வேடர் தெரு விநாயகர் கோவில் அருகில் புதிதாக ஆழ்குழாய் அமைத்து, மினிபவர் பம்பு அமைத்தல் மற்றும் குடிநீர் இணைப்பு தரும் வகையில், லைப் லைன் விஸ்தரிப்பு பணி செய்தல், வடிகால் அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டவுன் பஞ்., துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.