/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : நவ 30, 2024 01:09 AM
கிருஷ்ணராயபுரம் டவுன்
பஞ்., சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம், நவ. 30-
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், சாதாரண கூட்டம் நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். ஈஸ்வரன் கோவில் அருகில் புதிதாக சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய மினிபவர் பம்பு அமைத்தல், மாரியம்மன் கோவில் தெரு தலைமை நீரேற்று நிலைய பம்ப் ரூம் அருகில் உள்ள, சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய பிளாட்பாரம் பழுது மற்றும் பராமரிப்பு செய்தல், மேளக்காரத் தெருவில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைத்தல், வார்டு 4ல் மேல அக்ரஹாரம் மற்றும் நடுஅக்ரஹாரத்தில் வடிகால்களுடன் மேல் மூடி அமைத்தல்.
வார்டு எண் 14ல், சேவகனுாரில் புதிதாக மயானம் அமைத்தல், கோவக்குளம் குடித்தெருவில் உள்ள மயானம் பழுது பார்த்தல், டவுன் பஞ்சாயத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உள்ள மினி லாரி, மினி ஆட்டோவிற்கு பழுது மற்றும் பராமரிப்பு செய்து, வர்ணம் பூசப்பட்டு வருடாந்திர புதுப்பித்தல் பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.
டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.