/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,: மக்கள் வரி செலுத்த அறிவுறுத்தல்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,: மக்கள் வரி செலுத்த அறிவுறுத்தல்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,: மக்கள் வரி செலுத்த அறிவுறுத்தல்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,: மக்கள் வரி செலுத்த அறிவுறுத்தல்
ADDED : ஜன 22, 2025 07:15 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து மக்கள், வரி செலுத்த பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. பஞ்சாயத்து சார்பில், மக்களுக்கு பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை, மக்கள் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி, வணிக வரி ஆகிய வரிகளை செலுத்தி அதற்கான ரசீது பெற்று செல்ல வேண்டும். வரிகள் செலுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகளில், பஞ்சாயத்து நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.